திருவள்ளூர் மாவட்டத்தில் 1,250-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளில் வரும் 24-ம்தேதிக்குள் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்தாலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சிகளின் நிர்வாகஆணையருமான பாஸ்கரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிவண்ணன், சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர்களான ஜவஹர்லால், பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் 100 பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் 1,250-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளில் வரும் 24- ம் தேதிக்குள் முகாம் அமைத்து, சுமார் 10 ஆயிரம் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago