விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 1.26 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 77 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 17,224 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 16,711 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 273 பேர் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 234 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறுகையில்,
"விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு அலுவலகங் களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 1.26 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது", என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago