வாக்கு எண்ணும் மையத்தில் - மின் தடை ஏற்படாதிருக்க நடவடிக்கை தேவை : ராமநாதபுரம் திமுக வேட்பாளர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மின்தடை ஏற்படாத வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை திமுக வேட் பாளரும், அக்கட்சி மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி திமுக வேட்பாளர் முருகேசனுடன் வந்து நேற்று பார்வையிட்டார்.

பின்னர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், கட்டிடத்தின் பின்புறப் பகுதியில் கண்காணிப்பு இல்லை. இதுகுறித்து தேர்தல் பிரிவு வட்டாட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித் தேன்.

அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட சில பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

ஆகவே ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மின்தடை ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்