வேடசந்தூர் அருகே அரியபுத்தம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(51). விவசாயியான இவர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரைச் சேர்ந்த ஜோதிடர் சசிகுமார்(51) என் பவரிடம் ஜோதிடம் பார்க்கச் சென்றார். அப்போது உங்களது தோட்டத்தில் தங்கப் புதையல் உள்ளது. சில பூஜைகள் செய்தால் அதை எடுத்துவிடலாம் என ஜோதிடர் சசிக்குமார் கூறியுள்ளார்.
இதை நம்பிய தங்கவேல், ஜோதிடரை தனது தோட்டத்துக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்துள்ளார். பூஜைக்குப் பணம் செலவாகும் எனக் கூறி ஜோதிடர் சசிக்குமார், தங்கவேலிடம் அவ்வப்போது பணம், நகைகளைப் பெற்றுள்ளார். மொத்தம் ரூ.22 லட்சம், 45 பவுன் நகைகளை வாங்கியுள்ளார். மேலும் தனக்கு புல்லட், கார் வேண்டும் என ஜோதிடர் கேட்டதை, தங்கவேலு வாங்கிக் கொடுத்துள்ளார்.
தோட்டத்தில் பலமுறை பூஜைகள் செய்த ஜோதிடர் புதையல் எடுத்துத் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தங்க வேல், தான் ஏமாற்றப்படுவதை அறிந்து பணம், நகைகளை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து புல்லட், கார் ஆகியற்றை திருப்பிக் கொடுத் துள்ளார் ஜோதிடர். ஆனால் பணம், நகைகளை திருப்பித் தர வில்லை. இது குறித்து திண்டுக்கல் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜோதிடர் சசிக்குமாரை நேற்று கைது செய் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago