முகக்கவசம் அணியாமல் சென்ற 1,250 பேருக்கு போலீஸார் அறிவுரை :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற 1,250 பேருக்கு காவல் துறையினர் கரோனா நோய் தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட 27 இடங்களில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 1,250 பேரை தடுத்து நிறுத்தி கரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக முகக்கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், கையுறை அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்றவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும், கரோனா தொற்று பரவுதல், தடுத்தல் தொடர்பான விதிமீறல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் குற்ற வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்