கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை திறந்தவெளி சேமிப்பு கிடங்குக்கு உடனடியாக கொண்டு செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் கா.இளவரி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடப்பு பருவத்தில் 15 மாவட்டங்களுக்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நிர்வாகத்தின் துரித பணியை பாராட்டும் அதே நேரத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்த நெல்மணிகள் தமிழகம் முழுவதும் 4 லட்சம் டன் அளவுக்கு தேங்கி கிடக்கிறது. கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடக்கும் நெல்மணிகள் ஆடு, மாடு, பன்றிகள், எலிகள் ஆகியவற்றுக்கு இரையாகிறது என்ற செய்தி வேதனை அளிப் பதாக இருக்கிறது.
மேலும், தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே பெய்துவரும் மழையால், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின்றன. மற்றொரு புறம், நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து எடை குறைவாகி அதனால் பருவகால பணியாளர்கள், ஆயிரக்கணக்கில் இழப்பு தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, போதுமான அளவில் நெல் சேமிப்பு மையங்கள் இல்லாததுதான் முக்கிய காரணமாகும்.
கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டது. அப்போதே, நெல் சேமிப்பு மையம் திறப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் அதை செய் யாமல் மெத்தனமாக செயல்பட் டதும் முக்கிய காரணமாகும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கு ஏற்ப போதுமான அளவில் திறந்தவெளி சேமிப்பு மையங்களை திறக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங் களில் தேங்கியுள்ள நெல் மூட்டை களை உடனடியாக திறந்தவெளி சேமிப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல, கூடுதல் தலைமை செயலாளரும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை நிர்வாக இயக்குநரும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago