நெல்லை, குமரியில் பரவலாக மழை : மின்னல் தாக்கி பெண் மரணம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, குமரி மாவட்டத் தில் அணைப்பகுதி களிலும், பிற இடங்களிலும் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. திருநெல்வேலியில் மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான அளவில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவர ப்படி அணைப் பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 14, சேர்வலாறு- 6, மணிமுத்தாறு- 1, கொடுமுடியாறு- 22, ராதாபுரம்- 6.60.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 105.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 91.90 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 104.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 93.22 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 8 கனஅடி தண்ணீர் வந்தது.

176 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):

சேர்வலாறு- 118.47 அடி (156), வடக்குபச்சையாறு- 43.50 அடி (50), நம்பியாறு- 12.76 அடி (22.96), கொடுமுடியாறு- 6.60 அடி (52.50).

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த ராஜேஸ்வரி (50) என்பவர் தாமிரபரணியில் நேற்று மாலையில் குளிக்க சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வருகிறது. மழையால் மிதமான தட்பவெப்பம் நிலவுகிறது. நேற்று அதிகபட்சமாக பாலமோரில் 32 மிமீ மழை பெய்துள்ளது.

சுருளகோட்டில் 24 மிமீ, ஆனைக் கிடங்கில் 28, முக்கடல் அணையில் 30, முள்ளங்கினாவிளையில் 24, குருந்தன்கோட்டில் 18, கோழிப்போர்விளையில் 25, மாம்பழத்துறையாறில் 27, இரணியலில் 16, சிற்றாறு ஒன்றில் 13, சிற்றாறு இரண்டில் 24, புத்தன் அணையில் 13, பேச்சிப்பாறையில் 19, பெருஞ்சாணியில் 17, நாகர் கோவிலில் 14, பூதப்பாண்டியில் 12 மிமீ மழை பெய்திருந்தது.

நீர்பிடிப்பு பகுதியான பாலமோ ரில் அதிக மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 359 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக உள்ளது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 52.41 அடியாகவும், சிற்றாறு அணை நீர்மட்டம் 5.50 அடியாகவும், பொய்கையில் 18 அடி, மாம்பழத்துறையாறில் 14.68 அடியும் தண்ணீர் உள்ளது.

கருப்பாநதி அணையில் 39 மி.மீ. மழை

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 39 மி.மீ. மழை பதிவானது. அடவிநயினார் அணையில் 4 மி.மீ., ஆய்க்குடியில் 2.60, தென்காசியில் 1.40 மி.மீ. மழை பதிவானது.

நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 69 அடியாகவும், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 63.75 அடியாகவும், 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 53.48 அடியாகவும் இருந்தது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை நீர்மட்டம் 30.50 அடியாகவும், 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 29 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்