முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களை கடையின் உள்ளே அனுமதிக்க கூடாது : வணிகர்களுக்கு செய்யாறு கோட்டாட்சியர் உத்தரவு

By செய்திப்பிரிவு

முகக்கவசம் அணியாத வாடிக் கையாளர்களை கடையின் உள்ளே அனுமதிக்கக் கூடாது என செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தஆய்வுக் கூட்டம் தி.மலை மாவட்டம் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கோட்டாட்சியர் விஜயராஜ் தலைமை வகித்தார். இதில், மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட், காய்கறி கடை, இறைச்சி கடை, திருமண மண்டபம் மற்றும் உணவக உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கோட்டாட்சியர் விஜயராஜ் பேசும்போது, “கரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். வணிக வளாகங்கள், கடைகள், மற்றும் உணவு விடுதிகளில் உள்ள பணியாளர்கள் மற்றும் மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதையும், கைகளை சுத்தம் செய்வதையும் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கடையில் இருப்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந் திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது. தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

50 சதவீத வாடிக்கையாளர் களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்த வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது, ஆய்வில் தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்