நாமக்கல், திருச்செங்கோட்டில் கோட்டாட்சியர்கள் தலைமையில் மேற்கொண்ட ஆய்வின்போது முகக்கவசம் அணியாமல் வந்த 76 பேரிடம் ரூ.15 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை கட்டாயம் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை மக்கள் சரிவர கடைபிடிக்கின்றனரா என நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைகுமார் தலைமையில் நல்லிபாளையத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பேருந்துகள், நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களில் சென்ற பயணிகள், பொதுமக்களிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தேவையின்றி பயணங்களை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாத 41 நபர்களிடம் தலா ரூ.200 வீதம் ரூ.8,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுபோல் திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த 35 நபர்களிடம் தலா ரூ. 200 வீதம் ரூ.7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago