கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாததால் - ஈரோடு பேருந்து நிலையத்தில் 2 கடைகளை மூட உத்தரவு :

By செய்திப்பிரிவு

ஈரோடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத இரு கடைகளை மூட உத்தரவிட்டார்.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிந்தபடி செல்கிறார்களா, பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் கைகளைச் சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்படுகிறதா, பயணிகள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கிருந்த இரு விற்பனை நிலையங்களில் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் பணியில் இருந்ததால், கடைகளை மூட உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு நேதாஜி தினசரி காய்கறிச் சந்தைக்கு மாநகராட்சி அலுவலர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காய்கறிக்கடை வைத்திருப்போர் மற்றும் வாங்க வருவோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வின் போது அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்