சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் - ஆட்சியர் மதுபாலன் தலைமையில் நேற்று கரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், முஷ்ணம், புவனகிரி ஆகிய வட்டப்பகுதிகளை சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.
இதில் பேசிய சார்-ஆட்சியர் மதுபாலன், “கரோனாவின் 2 வதுஅலை மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாமல் கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு வரும் பொதுமக்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும். பேருந்துகள், திருமண மண்டபம், பேருந்து நிலையம், திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதை அதி காரிகள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
பயணிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பயணம் செய்கிறார்களா என்று பேருந்துகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும், திருமண மண்டபங்களில் அதிக அளவில் கூடுகிறார்களா, திரையரங்கங்களுக்கு முகக்கவ சத்துடன் மக்கள் செல்கிறார்களா, அங்கு 50 சதவீத மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனரா, அவர்களுக்கு கிருமிநாசினி தரப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும், கரோனா தொற்று பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago