மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய உர கொள்கையால் உர விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இககூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் வெளியி ட்டுள்ள அறிக்கை விவரம்:
மத்திய அரசு அத்தியாவசிய பொருள் பட்டியலில் இருந்த விவசாயிகள் பயன்படுத்தும் உரத்தை நீக்கியிருக்கிறது. இதனால், உர விலை கூடியிருக்கிறது. உதாரணமாக ரூ.1,200 விற்றுக்கொண்டிருந்த டிஏபி உரம் ரூ.1,900, ரூ. 2 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இந்நிலை தொடர்ந்தால் வியாபாரிகள் மேலும் உரங்களை பதுக்கி வைத்து, விலை ஏற்றத்திற்கு வழிவகை செய்வார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும் என்று கூறி விட்டு, விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பது போன்று புதிய வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்துவது, உரங்களை பல மடங்கு விலை உயர்ந்தது போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
விவசாயம் செய்ய முடியாமல் அல்லல்படும் சூழலை மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகள் மீது திணித்துள்ளது.
எனவே மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாக அத்தியாவசிய பட்டியலில் உரங்களைச் சேர்க்க வேண்டும், விலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago