ராமநாதபுரத்தில் பிளஸ் 2 மாணவர்கள் : 14 ஆயிரம் பேருக்கு செய்முறை தேர்வு :

By செய்திப்பிரிவு

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்.16-ல் தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 14,991 பேர் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இதற்காக 104 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவலைத் தடுக்க இம்மையங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செய்முறைத் தேர்வு மையத்தில் ஒரே நேரத்தில் 10 முதல் 20 மாணவ, மாணவிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்பே மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும். ஒரு பிரிவு மாணவர்கள் செய்முறைத் தேர்வை முடித்துச் சென்ற பின், அடுத்த பிரிவு மாணவர்கள் வருவதற்குள் தேர்வு மையத்தை சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்