நோன்பு கஞ்சிக்காக : சலுகை விலையில் பச்சரிசி தர கோரிக்கை :

By செய்திப்பிரிவு

நோன்புக் கஞ்சிக்காக சலுகை விலையில் தமிழக அரசு பச்சரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய ஜமாத் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஏ. ஜெய்னுல் ஆலம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் நோன்பு நோற்கும் முஸ்லிம்களுக்கு நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்காக சலுகை விலையில் தமிழக அரசு பச்சரிசியை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால், இதுகுறித்து அரசின் அறிவிப்பு வெளிவருவது தாமதமாகி உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்று, இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவேண்டி உள்ளது. வரும் ஏப்ரல் 14-ம்தேதி ரமலான் மாத நோன்பு தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுவதால், நோன்புக் கஞ்சி காய்ச்ச அரசு சலுகை விலை பச்சரிசி வழங்குவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பி உள்ளோம் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்