தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், வாசுதேவநல்லூர் தொகுதி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா, தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி மற்றும் திமுக கூட்டணி நிர்வாகிகள், தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம், நேற்று புகார் மனு அளித்தனர்.
அதில், `தென்காசி மாவட்டத்துக்கு உட்பட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரியில் உள்ளவாக்கு எண்ணும் மையத்தில் தொகுதி வாரியாக 5 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொருஅறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி காவலர்கள் மற்றும் கட்சிகளின் முகவர்கள் அமர்ந்துள்ள பகுதியில் ஒளிபரப்பாகிறது.
இந்நிலையில், 11-ம் தேதி இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் 4 நிமிடம் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஆனால், கண்காணிப்பு அறையில் மின்சாரம் தடைபடவில்லை. ஏன் அவ்வாறு நடந்தது என்பது தெரியவில்லை.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கும் இன்வெர்ட்டர் இணைப்பு கொடுத்து, மின்சாரம் தடைபடாமல் செய்ய வேண்டும்’ என்று கூறி யுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago