குளச்சல் அருகே ஆனக்குழி நெசவாளர் தெருவில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்து, நேற்று அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். ரீத்தாபுரம் ஆலய பங்குத்தந்தை அம்புரோஸ், ஆனக்குழி சி.எஸ்.ஐ. போதகர் அமோஸ் மற்றும் பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். செல்போன் கோபுரத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இத் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago