கரூரில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
கரூர் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள், கரூர் நகர வணிகர் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந் தவர்களுக்கு கரூர் நகர போக்கு வரத்து காவல் நிலையம் சார் பில் கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன் தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது.
இதில், கரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது. முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடைபிடித்து அதிலி ருந்து எவ்வாறு நம்மை பாதுகாத் துக்கொள்வது என விளக்கப் பட்டது. முகக்கவசம் இன்றி வருபவர்களை அனுமதிக் கக்கூடாது. சமூக இடை வெளியை கடைபிடிக்கவேண் டும் என அறிவுறுத்தப்பட்டது.
வணிகர் சங்கத் தலைவர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago