நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

நார்த்தாமலை முத்துமாரியம் மன் கோயில் பங்குனித் திருவிழா கடந்த 2 வாரங்களுக்கும் முன்பு பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஏப்.4-ம் தேதி காப்புக் கட்டுதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று தேரோட்டத் திருவிழா நடைபெறு வதாக இருந்தது. ஆனால், ஏப்.10-ம் தேதிக்குப் பிறகு கோயில்களில் திருவிழா நடத்தத் தடை விதிக்கப் பட்டதால், ஏப்.9-ம் தேதியே தேரோட்டம் நடத்தப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக் கையையொட்டி தேரோட்டத் திருவிழா முன்கூட்டியே நடத்தப் பட்டதால் அம்மனுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி அம்மனை வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்