அரியலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதியில் கரோனா பாதித்தவர் களுக்காக சிறப்பு சிகிச்சை மையம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பின்னர் ஆட்சியர் த.ரத்னா தெரிவித்தது:
கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு தலின்படி, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அறிகுறிகள் அற்ற கரோனா தொற்றா ளர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கும் வகையில் அரியலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதியில் 23 படுக்கை வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் சித்த மருத்துவ அலுவலர், ஆங்கிலமுறை மருத்துவர் கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, கரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சியும் அளிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் இளவரசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago