பசுமை தீர்ப்பாய தலைவர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, பசுமை குடில்கள் மூலம் உரமாக மாற்றப்படுகின்றன. இதற்காக 6 இடங்களில் பசுமை உர நுண் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நடைபெறும் பணிகளை சென்னை பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஸ்டான்லி ஜெபசிங் உடனிருந்தனர். இங்கு பணியின் நிலை நன்றாக இருப்பதாக நீதிபதி பாராட்டினார்.

இதேபோல், புளியங்குடி நகராட்சியிலும் குப்பையை தரம் பிரித்து உரமாக மாற்றும்பணிகளை பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி பார்வையிட்டார். மண்டல நகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் இளங்கோவன், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ரோமன் டெரிக் விண்டோ உடனிருந்தனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மருந்துக்கோட்டையில் பத்மநாபபுரம் நகராட்சியின் பசுமை நுண் உரக்குடில் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் ஆகியவை உள்ளன. இவற்றை நேற்று தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி ஆய்வு செய்தார். பின்னர் அவர், நுண் உரம் மையத்தில் மரக்கன்று நட்டுவைத்தார். பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் (பொ) ராஜாராம் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்