திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்காதவர்களிடம் இருந்து இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, கரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து அரசுத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர் என பல்வேறு குழுக்களாக பிரிந்து கரோனா தொற்று தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மாவட்ட எல்லைப்பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர்களுக்கு மாவட்ட எல்லைப் பகுதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதேநேரத்தில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடை வெளியை பின்பற்றாலும், ஒரே வாகனத்தில் அதிக அளவிலான ஆட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில், அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவலர்கள் வாகன சோதனை நடத்தி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில், 3 காவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற னர். உட்கோட்ட துணை காவல்கண்காணிப்பாளர், அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள்அவ்வப்போது சோதனைச்சாவடி களில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றாதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 1,233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணியாதவர் களிடம் இருந்து இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள் ளது. அதேபோல, சமூக இடை வெளியை பின்பற்றாத நிறுவனங் களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு, இது தொடர்பாக 6 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. தனிமனித இடை வெளியை கடைப்பிடிக்காதவர் களிடம் இருந்து அபராதத்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
இந்நிலையில், ஆம்பூர் அடுத்த நேதாஜி ரோடு, எஸ்.கே.ரோடு, எல்லையம்மன் கோயில் சந்திப்பு பகுதியில் நகராட்சி ஊழியர்கள் நடத்திய திடீர் ஆய்வில் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ. 4 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த கந்திலி சுந்தரம்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் முகக்கவசம் அணியாமலும், கரோனா விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ரூ.9 ஆயிரம் அபராதம் வசூலிக்கப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 1,233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago