நீலகிரி மாவட்ட ஆட்சியர் ெ.இன்ன சென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாதம் தினமும் 5 முதல் 10 என இருந்த கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 30-க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், நோய் பாதிப்புப் பகுதி களை தனிமைப்படுத்தும் நட வடிக்கைகள் தொடங்கியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கெட்டிகெம்பை, கேர்கெம்பை, புதுமந்து, எட்டினஸ் சாலை, கோடேரி எம்.டி.நகர்,பாடந்தொரை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ‘கோவிட் கேர்’ மையங்கள்மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க இடம்தேர்வு செய்யப்பட்டு வருகிறது.தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் கரோனாதடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் 82,180 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிபோட சுகாதாரத் துறை துணை இயக்குநர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் வீடுவீடாகச் சென்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி போடுவார்கள்.
நீலகிரி மாவட்டத்துக்குள் சுற்றுலா பயணிகள் வர தொடர்ந்து இ-பதிவு கட்டாயம். சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழைப் பெற்ற பின்னரே ஹோட்டல்கள், விடுதிகளில் தங்குவதற்கு அதன் உரிமையாளர்கள் அனுமதிக்கவேண்டும். கரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago