சின்னசேலம் அருகே - கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு :

By செய்திப்பிரிவு

சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மானை வனத்துறையினர் மீட்டனர்.

சின்னசேலம் அருகே நயினார்பாளையம், கீழக்குப்பம் பகுதிகளில் உள்ள காப்புக் காடுகளில் மான், மயில், காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகள் உள்ளன. அந்த வகையில் காப்புக் காட்டில் இருந்து மான் நேற்று முன்தினம் நள்ளிரவு நயினார்பாளையத்தை அடுத்த சின்னசேலம் விளைநிலப் பகுதியில் புகுந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக விவசாயக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. நேற்று காலை கிணற்றில் விழுந்த மானைக் கண்ட அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றிலிருந்து மானை மீட்டு மீண்டும் காப்புக் காட்டில் விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்