காட்டுமன்னார்கோவிலில் நேற்றுதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரக்கோணம் அருகே சோகனூ ரில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித் தும், கொலைகாரர்களை கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் வழங்கிட கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் அருகே சோகனூரில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago