பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்கின்றனரா என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என நாமக்கல் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் மற்றும் நடத்துநர்கள் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கின்றனரா என ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஆட்டோ ஓட்டுநர்களிடம் தமிழக அரசின் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு வழிமுறைகளை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்க வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பின்னர் ஆட்சியர் கூறுகையில், பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் அரசு விதிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்படுகிறதா என்று நகராட்சி அலுவலர்களும், போக்குவரத்துத்துறை அலுவலர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனி ருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago