பூட்டியிருந்த வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த 600 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை ஈரோடு குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மூலப்பாளையம் பாரதி நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பறக்கும் படை வட்டாட்சியர் ஜெயக்குமார், குடிமைபொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் திலகவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை அதிகாரிகள் உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 600 கிலோ எடை கொண்ட 12 மூட்டை ரேஷன் அரிசி, தராசு மற்றும் எடைக்கல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசியை பதுக்கிய நபர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago