அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் தூய மங்கள அன்னை ஆலயத்தின் 86-ம் ஆண்டு பெருவிழா கடந்த 4-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மாலை திருவிழா திருப் பலி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பங்குத் தந்தையர்கள் புள்ளம்பாடி ஹென்றிபுஷ்பராஜ், கொன்னைக்குடி ஜெயராஜ், புறத்தாக்குடி அமர்சிங், திருமானூர் ஜேம்ஸ் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக் களை காக்க வேண்டும் என பிரார்த்திக்கப்பட்டது.
தொடர்ந்து, இரவு 10 மணிக்கு மேல், மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேர்பவனி நடை பெற்றது. பங்குத் தந்தை ரெஜீஸ் தேரை புனிதப்படுத்த, தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியே நடைபெற்றது. வீடுதோறும் பக்தர்கள் அன்னையின் மீது மலர்களைத் தூவியும், தேரின் முன்பு மெழுகு வத்தி ஏற்றியும் வழிபட்டனர். விழாவில் நேற்று காலை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் விழா திருப்பலி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரெஜிஸ், அருட் சகோதரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago