கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க - 1,500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் தயார் : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க 1,500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட கண் காணிப்பு அலுவலர் ஷம்பு கல் லோலிகர் தலைமை வகித்தார்.

கூட்டத்துக்கு பின்னர் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியது: புதுக் கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ளவர்கள் 205 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர் களில் 60-க்கும் மேற்பட்டோர் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தற்போது தயார் நிலை யில் உள்ளன. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசியை செலுத் திக்கொள்ள வேண்டும்.பொது மக்கள் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். நெறிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயி ரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மீறும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு விதிமுறை மீறல்கள் தொடர்பாக ரூ.10 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குடுமியான்மலை ஸ்டாமின் கட்டிடம் தயார் நிலையில் உள்ளது. இதேபோல, புதுக்கோட்டையில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதியை தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒரே பகுதியில் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அந்தப் பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, சுகாதாரத்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங் கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE