திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டு நெறி முறைகளை பொதுமக்கள் பின் பற்ற வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு,பல்வேறு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை 7,970 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களை காட்டிலும் இது குறைவானது என்றாலும் இதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 702 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. 108 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் 3 பேருக்கு மேல் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தால் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்த நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
அதேபோல, மாவட்டம் முழுவதும் கரோனா பெருந்தொற்றை கண்டறிய பரிசோதனை முகாம் நடத்தவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களி டம் ஏற்படுத்த சுகாதாரத்துறை யினருக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க சுகாதாரத்துறையினருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கரோனா பரவலை கட்டுக்குள் வைக்க பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவன உரிமை யாளர்கள் ஒத்துழைப்பு அளித்ததை போல தற்போதும் அரசின் வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தமிழக அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. எனவே, அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இம்மாதம் இறுதி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங் கள், அரசு மற்றும் தனியார் அலுவ லகங்கள், உணவகங்களில் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பேருந்து களில் கூட்டம் கூடுவதை பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தவிர்க்க வேண்டும். பேருந்துகளின் பயணி கள் நின்றுக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும். வெளி இடங்களில் சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டம் தொழிற் சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதை தொழிற்சாலை நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
யாருக்காவது தொடர் காய்ச்சல், இருமல், உடல் சோர்வு போன்ற உடல் உபாதைகள் இருந்தால் சற்றும் தாமதிக்காமல் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறி மொத்த வியாபார கடைகள், பலசரக்கு கடைகள், ஜவுளி மற்றும் ரெடிமேட் நிறுவனங்கள், ஜெனரல்ஸ்டோர்ஸ், நகைக்கடைகளின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கும், கடைக்கு வரும் வாடிக்கையாளர் களுக்கு கரோனா தடுப்பு வழி முறைகளை செய்து கொடுக்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிப்பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago