விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கான ரூ.32 ஆயிரம் கோடியை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என தொடக்க கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்சங்க செயற்குழுக் கூட்டம் வந்தவாசியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் உதயகுமார், ஓய்வு பெற்ற ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பத்ராசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், “தமிழக அரசு ரூ.12,100 கோடி விவசாயக் கடன்தள்ளுபடி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட் டுள்ள நகைக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி அறிவிப்பு மூலமாக ரூ.32 ஆயிரம் கோடிக்கான கடன் தொகையை நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பாக கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். வைப்பு தொகை களுக்கு இடர்பாடு ஏற்படாத வகையில், தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டுறவு கடன் சங்க ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு முரண்பாடுகளை களைய வேண்டும்.
அரசாணைப்படி கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பொது விநியோக திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், துணைத் தலைவர்கள் குப்புசாமி, சந்தானம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர்கள் சீனிவாசன், குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், மாவட்டப் பொருளாளர் மாசிலாமணி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago