கரோனா பரவல் 2-ம் அலையால் - கண்காணிப்பு பணியில் உள்ளாட்சி துறை அதிகாரிகள் : முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தி.மலை மாவட் டத்தில் கண்காணிப்பு பணியை உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடை பிடித்தல் போன்ற உத்தரவுகளை பின்பற்றாதவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதையடுத்து, திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணியை தொடங்கியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் பேருந்துகளில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் அவர்கள், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்