செய்யாறில் - கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி : கராத்தே பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

கராத்தே பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுப் பேரணி திருவண் ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் முன் கள பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தன்னார்வ அமைப்பும் மற்றும் கராத்தே பயிற்சி பள்ளியும் இணைந்து கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. செய்யாறு மார்க்கெட் பகுதியில் தொடங்கிய பேரணியை வழக்கறிஞர் மணி தொடங்கி வைத்தார். காமராஜர் நகர், ஆற்காடு சாலை, வைத்தியர் தெரு, சின்னத்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய வீதிகளில் பேரணி சென்றது. பேரணியில் பங்கேற்ற கராத்தே பள்ளி மாணவர்கள், “கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என முழக்கமிட்டனர்.

கரோனா தடுப்பூசி முகாம்

இதையடுத்து, நாவல்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு முதற்கட்ட மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில், வட்டார மருத்துவ அலுவலர் ஷர்மிளா, உதவும் கரங்கள் நிர்வாகி ஆதிகேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்