கரோனா வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை : நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கரோனாதொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாதம் தினமும் 5 முதல் 10 என இருந்த கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 30-ஆக உயர்ந்துள்ளது.

இதனால், நோய் பாதிப்புப் பகுதிகளை தனிமைப்படுத்தும்நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கெட்டிகெம்பை, கேர்கெம்பை, புதுமந்து, எட்டினஸ் சாலை, கோடேரி எம்.டி.நகர், பாடந்தொரை பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் 115 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக ‘கோவிட் கேர்’ மையங்கள்மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. தற்போது இளைஞர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 20 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க இடம்தேர்வு செய்யப்பட்டு வருகிறது.தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் கரோனாதடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்தில் 82,180 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிபோட சுகாதாரத் துறை துணை இயக்குநர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் வீடுவீடாகச் சென்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி போடுவார்கள்.

நீலகிரி மாவட்டத்துக்குள் சுற்றுலாப் பயணிகள் வர தொடர்ந்து இ-பாஸ் கட்டாயம். சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனாஇல்லை என்ற சான்றிதழைப் பெற்ற பின்னரே ஹோட்டல்கள்,விடுதிகளில் தங்குவதற்கு அதன் உரிமையாளர்கள் அனுமதிக்கவேண்டும். கரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்