கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை (ஏப். 11) திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் உள்ள பழமையான வீரராகவப் பெருமாள் கோயில் அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசைக்கு முதல் நாள் இரவே வந்து தங்கி, அமாவாசையன்று கோயில் தெப்பக் குளத்தில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, வீரராகவப் பெருமாளை வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், நாளை அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூருக்கு வருகை தந்தால், கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், அமாவாசையின் முதல் நாளான இன்று (ஏப். 10) மதியம் 12 மணி முதல் அமாவாசை நாளான நாளை நள்ளிரவு வரை பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயில் தெப்பக் குளத்தில் தர்ப்பணம் செய்வதை தவிர்க்கும் வகையில் கடந்த ஓராண்டாக தெப்பக் குள வாயில்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago