அரியலூரில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் த.ரத்னா கூறியது: கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கா மலும் இருப்பதால், நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே அனு மதிக்கப்பட்டுள்ள சில செயல் பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்பது, ஒரு சில செயல்பாடு களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனு மதி அளிப்பது அவசியமாகிறது. எனவே, தமிழக அரசு அறிவித் துள்ள கட்டுப்பாடுகளை பொது மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், அந்தப் பகுதிகளிலிருந்து வெளியில் வராத வகையில், காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அந்த பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதுடன், கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தி யாவசிய பொருட்கள் கிடைக்க உதவி புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர்.

கரோனா தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடன டியாக அருகிலுள்ள அரசு மருத்து வமனையை அணுக வேண்டும். இதை கடைபிடித்து, கரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்து கிருஷ்ணன் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்