பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (ஏப்.10) லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான சுபாதேவி தெரிவித் துள்ளது:
பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று(ஏப்.10) காலை 10 மணியளவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடை பெறுகிறது.
இதில், நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சிவில், ஜீவனாம்சம், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் வாகன விபத்து வழக்குகள் ஆகியவற்றுக்கு சமரச முறையில் தீர்வு காணப்படும்.
எனவே, வழக்காடிகள் இதில் கலந்துகொண்டு தீர்வு பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago