தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை களில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு இன்று (ஏப்.10) முதல் இலவச கரோனா தடுப்பூசி போடப்படுவதாக கரூர் நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்தார்.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கரூர் நகராட்சி ஆணையர் சுதா தலைமையில் கரூர் நகராட்சி கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நகராட்சி சுகாதார அலுவலர் யோகானந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில். கரோனா 2-வது அலை உருவாகி அதிகரித்து வருவதால், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தவேண்டும். சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பின்னர், கரூர் நகராட்சி ஆணையர் சுதா செய்தியாளர்களிடம் கூறியது: கரூர் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங் களில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு கரூர் நகராட்சி மூலம் ஏப்.10-ம் தேதி (இன்று) முதல் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago