கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியிலிருந்து குளித்தலை ரயில்வே கேட் செல்லும் பாதையை கடந்த பல ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், அப்பாதை அமைந் துள்ள பகுதியில் தனியார் இடம் உள்ளதாகக் கூறி, நீதிமன்றம் சென்றதில் அப்பாதை மூடப்பட்டது.
இந்நிலையில். இதுதொடர்பான வழக்கில், கடந்த பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பாதையை திறக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராததைக் கண்டித்தும், உடனடியாக பாதையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியும் குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன் குளித் தலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத் தினர்.
அப்போது, இரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், இரு வாரங்களுக்கு மேலாகியும் பாதையை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் அமைப்பினர் குளித்தலை நகராட்சி அலுவலக நுழைவாயில் பகுதியில் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், நக ராட்சி ஆணையர் (பொ) ராதா மற்றும் குளித்தலை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, ஏப்.12-ம் தேதி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
ஆனால், நீதிமன்றம் உத்தர விட்ட பிறகும் ஏப்.12-ம் தேதி வரை ஏன் அவகாசம் அளிக்கிறீர்கள். பாதையை திறக்கும் வரை போராட் டம் தொடரும் என தெரிவித்து, காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago