நெல்லை மாவட்டத்தில் இன்று லோக் அதாலத் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஏ. நசீர் அகமது வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இவ்வாண்டு ஏப்ரல் 2-வது சனிக்கிழமை தேசிய அளவில் லோக் அதாலத் உச்சநீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை யில் நடைபெறுகிறது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி உட்பட 9 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுக் களால் 17 அமர்வுகளாக லோக் அதாலத் இன்று (10-ம் தேதி) நடைபெறவுள்ளது.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக் கூடிய குற்ற வழக்குகள் உள்ளிட்ட 2,500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்