அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலத்தில் பணிபுரியும் பணியாளர்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

திண்டுக்கல் மண்டலத்துக்குட்பட்ட பொதுமேலாளர், துணைப் பொதுமேலாளர், அலுவலகப் பணியாளர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என முதல் தவணையாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலத்தில் பணிபுரிந்துவரும் நிலையில் படிப்படியாக கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியைக் கண்காணிக்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் 45 வயதுக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்து நர்கள் விடுபடாமல் கணக்கெடுத்து கரோனா தடுப்பூசி செலுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மண்டலப் பொது மேலாளர் கணேசன் உள்ளிட்டோர் இரண்டாம் கட்டமாக நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என அரசுப் போக்குவரத்துக் கழகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்