குடிநீர் வழங்கக் கோரி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பொய்கைப்புத்தூரிலும், பெரம்பலூர் மாவட்டம் தம்பிரான்பட்டியிலும் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் அருகே உள்ள பொய்கைப் புத்தூர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குழாய் உடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அப்பகுதியில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், விரக்தியடைந்த அப்பகுதி மக்கள், பெண்கள், குழந் தைகள் உள்ளிட்டோர் காவிரி குடிநீர் வழங்கக் கோரி கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொய்கைப்புத்தூர் பகுதியில் நேற்று காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த லாலாபேட்டை போலீஸார், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
கரூர் நகராட்சி வடக்கு காசிம் தெரு, அன்சாரி தெரு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக முறை யான குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லை. குடிநீர் விநியோகம் செய்யும்போதும் குறைந்த நேரமே வழங்குவதுடன், குடிநீரில் புழுக்கள் மிதப்பதால் குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்படுகிறது என கரூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து வடக்கு காசிம் தெரு, அன்சாரி தெரு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் கரூர் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
பின்னர், நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அப்போது, குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்று தெரிவித்தனர்.
பெரம்பலூர் அருகே
பெரம்பலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில் கடந்த ஒருவார காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலர்களிடம் புகார் செய்தும், நட வடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால், ஆத்திரமடைந்த தம்பிரான்பட்டி கிராம மக்கள் நேற்று செட்டிக்குளம்-பெரம்பலூர் சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது, இந்த மறியலால் அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago