வாக்குச்சாவடிக்குள் வாக்குசேகரித்த விவகாரம் - கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு :

By செய்திப்பிரிவு

வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரித்த விவகாரம் தொடர்பாக கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண்: 14-ல் அதிமுகவைச் சேர்ந்த கரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பாலமுருகன் நேற்று முன்தினம் வாக்களித்தார். வாக்களித்த பின்னர், அவர் வாக்குச்சாவடியை விட்டு வெளியேறாமல், வாக்குச்சாவடிக்குள்ளேயே நின்று அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ வாங்கல் வாக்குச்சாவடியை பார்வையிட சென்றார். அப்போது, பாலமுருகன் வாக்குச்சாவடிக்குள் இருந்தது குறித்து செந்தில் பாலாஜிக்கும், பாலமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரேவிடம் செந்தில்பாலாஜி புகார் அளித்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து வாங்கல் போலீஸில் குப்புச்சிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த்(36) புகார் அளித்ததை அடுத்து, கரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பாலமுருகன் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்