அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி களில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங் கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலின்போது வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, நேற்று சீல் வைக்கப்பட்டன.
ஆட்சியர் த.ரத்னா தலை மையில், தேர்தல் பொது பார்வை யாளர்கள் பரத் யாதவ், சி.சத்யபாமா மற்றும் வேட்பாளர்களின் முகவர் கள் முன்னிலையில் நேற்று பாது காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப் பட்டது.
பின்னர், ஆட்சியர் கூறியபோது, ‘‘நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக அரியலூர் தொகுதியில் 376 வாக்குச் சாவடி மையங்களில் மொத்தமுள்ள 2,64,715 வாக்காளர்களில் 2,23,800 பேர் வாக்களித்துள்ளனர். இது 84.54 சதவீத வாக்குப்பதிவாகும்.
இதேபோல, ஜெயங்கொண்டம் தொகுதியில் 377 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தமுள்ள 2,66,268 வாக்காளர்களில் 2,14,016 பேர் வாக்களித்துள்ளனர். இது 80.38 சதவீதமாகும். அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 82.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தற்போது வாக்குப்பதிவு இயந் திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையம் மற்றும் அறைகள் முழுவதும் 170 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வட்டாட்சி யர் நிலையில் அலுவலர்கள் கொண்ட 3 குழுக்கள் செயல்படும். கண்காணிப்பு பணியை வேட்பாளர்களின் முகவர்கள் இங்குள்ள தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.
மேலும், மத்திய காவல் படை யினர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை, அமர்நாத் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.
கரூர் மாவட்டத்தில்...
இதேபோல, கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக் குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தளவா பாளையம் எம்.குமாரசாமி பொறி யியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு முதல் கொண்டு வரப்பட்டன.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முறையாக கணினியில் பதிவுசெய்யப்பட்ட பின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே மண்டல அலுவலர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்படுவதையும், அவை அனைத்தும் சம்மந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படுவதையும் இரவு முழுவதும் இருந்து பார்வை யிட்டு, ஆய்வு செய்தார்.
சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் (கரூர்) வினய்பப்லானி, (அரவக் குறிச்சி) சந்தன் சயன் குஹா, (கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை) நாராயண் சந்திர சர்க்கார் மற்றும் வேட்பாளர்கள், முகவர்களின் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் 4 தொகுதி தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நேற்று வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டன.
ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு அறை முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் 24 மணிநேர மூன்றடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி கேமரா கண்காணிப்புக்குள் வாக்கு எண்ணிக்கை மையம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (கரூர்) பாலசுப்பிர மணியன், (குளித்தலை) ஷே.ஷேக் அப்துல் ரகுமான், (கிருஷ்ண ராயபுரம் (தனி)) தட்சிணாமூர்த்தி, (அரவக்குறிச்சி) தவச்செல்வம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் 40 மண்டல அலுவலர்கள் தலைமையில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கும், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் 35 மண்டல அலுவலர்கள் தலைமையில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கும் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டன.பெரம்பலூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக் கப்பட்டுள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையம் 103 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், குன்னம் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 90 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 2 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 2 துணை காவல் கண் காணிப்பாளர்கள் தலைமையில் 3 ஆய்வாளர்கள், 15 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 21 காவலர்கள், 39 ஆயுதப்படை காவலர்கள், 24 இந்திய திபெத்திய பாதுகாப்பு படையினர், 40 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்கள் என மொத்தம் 284 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப.வெங்கட பிரியா தெரிவித்தார்.
முன்னதாக, பெரம்பலூர் தொகு திக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரம்பலூர் தொகுதி பொதுப்பார்வையாளர் மதுரிமா பருவா சென் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.இ.பத்மஜா வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறையை பூட்டி சீல் வைத்தார்.
குன்னம் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா தலைமையில், அத்தொகுதியின் பொதுப்பார்வையாளர் தேஜஸ்வி நாயக், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அத்தொகுதியின் தேர்தல் அலுவலர் சங்கர் பூட்டி சீல் வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
அறைகள் சீல் வைக்கும் பணியின்போது தேர்தல் பொது பார்வையாளர் ஜி.ரகு, மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி, எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் மற்றும் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago