கரூர் மாவட்டம் 83.96% வாக்குப்பதிவுடன் தமிழக அளவில் முதலிடம் :

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டம் 83.96 சதவீத வாக்குப்பதிவுடன் முதலி டம் பெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் மொத்தம் 4,33,016 ஆண், 4,66,140 பெண், 80 மூன்றாம் பாலினத்தவர் என கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,99,236 வாக்காளர்கள் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், 4 தொகுதிகளிலும் 3,67,389 ஆண், 3,87,630 பெண், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7,55,034 பேர் வாக்க ளித்துள்ளனர். இது 83.96 சதவீத வாக்குப்பதிவாகும்.

கரூர் மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 83.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதால், மாநில அளவில் அதிக வாக்குப் பதிவான மாவட்டங்களில் கரூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்