கடலூர் மாவட்டத்தில் 76.6 சத வாக்குகள் பதிவு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 76.6 சதவீத வாக்குகள் பதிவாயின.

கடலூர் மாவட்டத்தில் 10,55,291 ஆண் வாக்காளர் கள்,10,86,436 பெண் வாக்காளர்கள், 208 திருநங் கைகள் என மொத்தம் 21 லட்சத்து 41 ஆயிரத்து 395 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக கடலூர் தொகுதியில் 343, குறிஞ்சிப்பாடி தொகுதியில் 336, புவனகிரி தொகுதியில் 350, சிதம்பரம் தொகுதியில் 354, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 318 என மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 3,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 4,030 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,3,604 வாக்குப் பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 3,877வாக்களித்த வாக்கு விவரம் அறியும் விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

நேற்றைய வாக்குப்பதிவு பணிகளை14,404 வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 பேர் வீதம் 6,002 சுகாதாரப்பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்கள் வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, சானிடைசர், கையுறை வழங்கி வாக்களித்தனர். கடலூர் எஸ்பி அபிநவ் தலைமையில் காவல் அதிகாரிகள், 15 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 5,501 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் காலையில் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு தொடங்கியது. மதிய வேளையில் சற்று தொய்வடைந்து மாலையில் மீண்டும் விறுவிறுப்பானது. மாவட்ட அளவில் 76.6 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.

இதில், கடலூர் 74.77 சதவீதம், சிதம்பரம் 71.94 சதவீதம், குறிஞ்சிப்பாடி 81.25 சதவீதம், புவனகிரி 78.48 சதவீதம், பண்ருட்டி 79.6 சதவீதம், விருத்தாசலம் 76.98 சதவீதம், நெய்வேலி 74.3 சதவீதம், காட்டுமன்னார்கோவில் (தனி) 75.87சதவீதம், திட்டக்குடி (தனி) தொகுதியில் 75.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் காலையில் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு தொடங்கியது. மதிய வேளையில் சற்று தொய்வடைந்து மாலையில் மீண்டும் விறுவிறுப்பானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்