கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80.18 சதவீதம் வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று நடைபெற்ற வாக்குப் பதிவின் போது 80.18 சதவீத வாக்குகள் பதிவாயின.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5, 43,472 ஆண் வாக்காளர்கள், 5,36,851 பெண் வாக்காளர்கள், 202 திருநங்கைகள் என 10 லட்சத்து 80 ஆயிரத்து 525 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களுக்காக கள்ளக்குறிச்சித் தனி தொகுதியில் 416, உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் 407, ரிஷிவந்தியம் தொகுதியில் 374, சங்கராபுரம் தொகுதியில் 372 வாக்குச்சாவடிகள் எனமாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 1,569 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 2,357 வாக்குப்பதிவு இயந்திரங்களும், தலா1,569 வாக்குப் பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,569 வாக்களித்த வாக்கு விவரம்அறியும் விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

7,568 வாக்குச்சாவடி அலுவலர்கள் நேற்றைய வாக்குப்பதிவு பணிகளை மேற்கொண்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 பேர் வீதம் 3,118 சுகாதாரப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் வாக்காளர்களுக்கு உடல் வெப்பபரிசோதனை செய்து, சானிடைசர், கையுறை வழங்கி வாக்களித்தனர்.

கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் தலைமையில் காவல் அதிகாரிகள், 6 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 2255 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் காலையில் சற்று மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு முற்பகலில் விறுவிறுப்படைந்தது. மதிய வேளையில் சற்று தொய்வடைந்து மாலையில் சூடுபிடித்தது.

மாவட்ட அளவில் 80.18 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்