சட்டப் பேரவை தேர்தலில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 61.15 சதவீதம், தென்காசி மாவட்டத்தில் 72.58 சதவீதம், தூத்துக்குடி மாவட்டத்தில் 69.84 சதவீதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 68.8 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் தொகுதியில் - 68.39 சதவீதம், நாங்குநேரி தொகுதியில் - 60.89 சதவீதம், பாளையங்கோட்டை- தொகுதியில் 57.76 சதவீதம், ராதாபுரம்- தொகுதியில் 58.87 சதவீதம் , திருநெல்வேலி தொகுதியில் - 66.90 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் சராசரியாக 61.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு்ளள 1,884 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி சங்கரன்கோவில் தொகுதி யில் 71.47 சதவீதம், வாசுதேவநல்லூர் தொகுதியில் 71.87 சதவீதம், கடையநல்லூர் தொகுதியில் 70.06 சதவீதம், தென்காசி தொகுதியில் 72.33 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 77.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தென்காசி மாவட்டத்தில் சராசரியாக 72.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள யுஎஸ்பி. கல்லூரிக்குபலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 69.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விளாத்திகுளம் தொகுதியில் 76.43 சதவீதம், தூத்துக்குடி தொகுதியில் 65.04 சதவீதம், திருச்செந்தூர் தொகுதியில் 69.96 சதவீதம், வைகுண்டம் தொகுதியில் 72.34 சதவீதம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 69.82 சதவீதம், கோவில்பட்டி தொகுதியில் 67.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத் தில் அதிகபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 76.43 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 65.04 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.இருப்பினும் மிகத்துல்லியமான வாக்குப்பதிவு விகிதம் அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த பிறகு, அதில் உள்ள படிவங்களை சரி பார்த்த பின்னரே தெரியவரும். எனவே, துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் இன்று (ஏப்.7) தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 68.8 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 6 சட்டப்பேரவை தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி 9.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 21.72 சதவீதம், 1 மணி நிலவரப்படி 33.79 சதவீதம், 3 மணி நிலவரப்படி 51.16 சதவீதம், மாலை 5 மணி நிலவரப்படி 62.41 சதவீதம்பேரும் வாக்களித்திருந்தனர். 7 மணிக்குவாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில்,கடைசிநேரம் வரை வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 10,81,432 வாக்குகள் பதிவாகியிருந்தன. இது 68.80 சதவீதம் ஆகும். அதிகபட்சமாக கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் 75.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.
சட்டப்பேரவை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள்: கன்னியாகுமரி- 75.34, நாகர்கோவில் - 66.70, குளச்சல் 67.45, பத்மநாபபுரம் 69.82, விளவங்கோடு 66.90, கிள்ளியூர் 65.85.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago