உதகையில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து இயந்திரங்களும் உதகை ஃபிங்கர்போஸ்ட் பகுதியிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம், வாக்கு எண்ணும் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் ஜன்னல்கள் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் அறைகளில் இரும்பு வலை தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையமான பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago