நெய்வேலியில் அரசு கல்லூரி அமைக்கப்படும் : திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் உறுதி

By செய்திப்பிரிவு

நெய்வேலி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சபா.ராஜேந் திரன் தொகுதி முழுவதும் சூறாவளிபிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று நெய்வேலி நகர வட்டம்-7 இந்திராகாந்தி சிலையில் தொடங்கி பல்வேறு நகர் பகுதியாக சென்று வட்டம்-3 பெரியார் சதுக்கத்தில் நிறைவு செய்தார்.

அப்போது சபா. இராஜேந்திரன் பேசுகையில், “இந்தியாவில் ஒரே நாடு என்ற கோஷத்துடன் ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர துடிக்கும் பாஜகவுடன் கைகோர்த்து வரும் அதிமுக, பாமக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்த தொகுதியில் போட்டியிடும் நான் உங்களில் ஒருவனாக இருந்து இப்பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி தந்துள்ளேன். மேலும், கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்களின் உயர்கல்வி மேம்பாட்டுக்கு நெய்வேலியில் அரசு கல்லூரி அமைக்கப்படும். நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களை உள்ளடக்கி ஊராட்சியின் வளர்ச்சிக்காக நெய்வேலியில் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும். நெய்வேலியில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்படும். வடக்குத்து ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மின் மயானம் அமைத்து தரப்படும். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்.

எனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்