`ஸ்மார்ட் ' மீனவர் கிராமம் அமைத்து மீனவர்களுக்கான திட்டங்கள் செயல் படுத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் தெரிவித்தார்.
பாஜக வேட்பாளர் குப்புராமை ஆதரித்து ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் மீனவ மக்களிடம் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் ஆதரவு திரட்டினார்.
பின்னர் ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை அவரது வீட்டில் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். கச்சத் தீவு, சுருக்குமடி பிரச்சினைக்குத் தீர்வு, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜக அரசு வெளிநாட்டில் தவித்த 2,000 மீனவர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது. மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் (சிஎம்எப்ஆர்ஐ) மூலம் கடல்பாசி வளர்ப்பு, கூண்டு மீன் வளர்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
`ஸ்மார்ட் சிட்டி' திட்டம்போல் `ஸ்மார்ட்' மீனவர் கிராமம் அமைத்து மீனவர் களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத் தப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பாசி வளர்த்து 20 மில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டும் வகையில் தொழிற்சாலை அமைக்கப்படும். கடல் அட்டைக்கான தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago